BONE AND JOINT DISEASE

 

Our doctors are on call 24/7. Same Day Appointments Available.

 

கண்டவாதம்( கழுத்து) (Fibromyalgia neck)

வருந்திட கழுத்து வீங்கி, வலித்து,  உளைந்து, இறுக்கி, விம்மி பிடரிவாங்கி பொருக்கென குத்தும் உண்டாய் அடைத்து வந்து நோவாய் இருந்து விடும் இது கண்டவாதம் செய்கையே

பிடரி வாதம் (Cervical spondylosis)

பிடரி நொந்து , உளைந்து,குத்தி,வலித்து இடறி புயத்தில் இழுத்து முதுகு நோவாய் தொடர்ந்து தலையில் குத்தி பிடரி வாங்கும் அரும் கண் அயரும் பிடரி வாதமாமே

தோள்பட்டை வாதம் (Frozen shoulder/periarthritis shoulder)

பொற் புயத்தில், கையில் சேர்ந்திடும் வாங்கி வருந்தவே உளைந்து குத்தி வசமற அழுந்தி வீங்கும் இது பொருந்திய புயவாதத்தின் குணமெனப் புகன்றார் அன்றே

முதுகு வாதம் (Fibromyalgia back)

.முதுகினில் விறைத்து குத்தி முடக்கதாய் கழுத்து உளைந்து கடினமாய் உவாதி செய்யும் அதிகமாய் முதுகு வாதம் செய்குணம் அறையும் காலே

தண்டுவாதம் (Lumbar spondylitis)

இடையினில் பிடித்து குத்தி நலியவே கொதிப்பும் உண்டாய் பாரிய இடுப்புச்சந்து பகர்ந்திடில் மிண்டி பூட்டி வீரிய நடை கொடாது விரைத்து உடல் புண்போல் நோவு உண்டாகும். சீரிய தண்டுவாதம் செய்குணம் செப்பும் காலே

சந்து வாதம் (Osteoarthritis)

சந்தினில் பொருந்தி, குத்தி சடுதியாய் வீங்கி ,நொந்து உடன் திரும்பொண்ணாது, திரும்பிடில் உளைந்து வீங்கும் சுந்தர மையினேர் சந்துவாதம் பகரும் காலே. சந்தை பற்றி விடாமல் நின்று சாய் நேரத்தில் மிகுத்துளைந்து நொந்து அப்படியே நோக்கங் கெட்டு. இந்தபடியே இடறு பண்ணும் வருத்தும் சந்துவாதம் இதே

தொடைவாதம் (Neuropathy pain ,etc..)

தொடையினில்குத்தி சுருங்கியே திமிர்ந்து வீங்கி பார் உற நடை கொடாது பரந்து உடன் உளைந்து நோகும் சீருறு தொடைவாதம் செய் குணம் சிறந்து காணே

சர்வ அங்க வாதம்

காயம் (உடல் )குத்திடும், கடுக்கும் வீங்கும் பரந்து நோவாய் எங்கும் உளைந்திடும் மயக்கம் சாரும் பிடித்திடும் எழும்பொண்ணாது மார்பதைக்கும், அன்னம் குறையும், நடை கொடாது துயருற நடுக்கி வீழ்த்தும் கடுத்திடும் களைக் கூடும் கடுஞ்சர்வாங்க வாதம் பகர்ந்திடடிற் கடினமாமே